நெகட்டிவ் நிலைக்குச் செல்லும் இந்தியப் பொருளாதாரம்...  ஃபிட்ச் ரேட்டிங்ஸ் எச்சரிக்கை!

0 3197

ந்தியப் பொருளாதார தர மதிப்பீடு  நிலையான மதிப்பீட்டிலிருந்து நெகட்டிவ் நிலைக்கு மாற்றியிருக்கிறது, உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ். கொரோனா வைரஸின் உலகளாவிய பரவல் இந்தியப் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

ஏற்கெனவே தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் இந்தியாவின்  அதிகரித்த கடன் மதிப்பு மற்றும் குறைந்து போன முதலீட்டுத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் பொருளாதார குறியீட்டை (Baa3 - Downgrade) நெகட்டிவ் நிலைக்கு மாற்றியது. இது 22 ஆண்டுகளில் இல்லாத  வீழ்ச்சியாகும். மூடீஸைத் தொடர்ந்து தற்போது  ஃபிட்ச் ரேட்டிங்சும் இந்தியப் பொருளாதாரத்தின் தர மதிப்பீட்டை 'BBB-' நிலைக்கு மாற்றியிருக்கிறது.

image

"இந்தியாவின் நீண்ட கால வெளிநாட்டு நாணய வழங்குநரின் நிலையான மதிப்பீடு (ஐடிஆர் - foreign currency issuer default rating) நிலையானதாக இருக்கும் என்று கூறிவந்த நிலையில் இனி எதிர்மறையாக மாறும்" என்று தர நிர்ணய அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

கொரோனா நோய்த் தொற்று பரவுவதற்கு முன்னரே இந்தியாவின் நிதித்துறை பலவீனமாகவே இருந்தது. வணிகர்களும் நுகர்வோர்களும் நம்பிக்கையை இழந்திருந்தார்கள். மக்கள் வாங்கும் சக்தியை இழந்திருந்தனர். இந்த நிலையில் மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்த் தொற்றால் அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கால் மக்கள் அதிக அளவில் வேலை வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். நாட்டின் உற்பத்தி விகிதமும் குறைந்திருக்கிறது. கொரோனா ஊரடங்கானது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பலவீனமடையச் செய்திருக்கிறது.

வேலை வாய்ப்பின்மை, நிதிப் பற்றாக்குறை, பொருளாதார மந்த நிலை, பொதுத்துறை கடன் விகிதங்கள் அதிகரிப்பு ஆகியவற்றால் நிதி அளவீடுகள் மோசமடைந்திருக்கிறது. இந்த நிதியாண்டில் மட்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 71 % இருந்த கடன் அளவு 84.5 % ஆக உயரும் என்று ஃபிட்ச் தெரிவித்துள்ளது.

"கொரோனா நோய் பரவல் குறிப்பிடத்தக்க அளவில் இந்தியாவின் பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்தும். இந்த ஆண்டில்  பொதுத்துறை நிறுவனங்கள் கடுமையான சவால்களைச் சந்திக்கும்" என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments